உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  கூட்டுறவு வார விழாவில் மரக்கன்று நடவு

 கூட்டுறவு வார விழாவில் மரக்கன்று நடவு

திருப்பூர்: அனைத்திந்திய 72 வது கூட்டுறவு வார விழா, திருப்பூர் மாவட்டத்தில் நேற்று துவங்கியது. திருப்பூர் - பல்லடம் ரோட்டிலுள்ள திருப்பூர் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில், கூட்டுறவு சங்க கொடியேற்றப்பட்டது. கூட்டுறவு சங்க திருப்பூர் மண்டல இணை பதிவாளர் பிரபு, கொடியேற்றி, மரக்கன்று நடும் விழாவை துவக்கிவைத்தார். கூட்டுறவு சங்க வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. தொடர்ந்து, கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த செல்பி பாய்ன்ட்டை, கலெக்டர் மனிஷ் நாரணவரே திறந்துவைத்தார். அனைவரும் அருகே நின்று, செல்பி எடுத்தனர். கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்கள், சார் பதிவாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர். கூட்டுறவு வாரவிழாவில் இன்று, வீரபாண்டி கூட்டுறவு வீடு கட்டம் சங்கத்தில், கடன் மேளா, உடுமலை வேளாண் உற்பத்தியாளர் விற்பனை சங்கத்தில், காலை, 7:00 மணி முதல் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ