உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மலை கிராமத்தில் விவசாயம் பழங்குடியின மக்கள் கோரிக்கை

மலை கிராமத்தில் விவசாயம் பழங்குடியின மக்கள் கோரிக்கை

உடுமலை, ; சித்திரை பட்டத்தில், சாகுபடி மேற்கொள்ள விதை மற்றும் உழவுக்கருவிகள் இல்லாததால், வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளதாக, உடுமலை பகுதி பழங்குடியின மக்கள் அரசுக்கு மனு அனுப்பியுள்ளனர்.ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டம், உடுமலை, அமராவதி வனச்சரகத்தில், 13க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன. அங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள், 300க்கும் மேற்பட்டவர்களுக்கு வனஉரிமை சட்டத்தின் கீழ், அங்குள்ள விளைநிலங்களில் விவசாயம் செய்வதற்கான நில உரிமை ஆவணம் இரு ஆண்டுகளுக்கு முன் அரசால் வழங்கப்பட்டது.இதையடுத்து, தங்கள் வாழ்வாதாரத்துக்காக பல்வேறு பயிர் சாகுபடிகளை பழங்குடியின மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், சாகுபடி மேற்கொள்ள தேவையான உழவு கருவிகள் மற்றும் விதைகள் குறித்த நேரத்தில் கிடைப்பதில்லை.சித்திரை பட்டத்தில், மாவடப்பு, குழிப்பட்டி, காட்டுப்பட்டி, பூச்சிக்கொட்டாம்பாறை, கருமுட்டி உள்ளிட்ட மலை கிராமங்களில், நிலக்கடலை, பீன்ஸ், ராகி, தட்டைப்பயறு சாகுபடி செய்வது வழக்கம். இந்த சாகுபடிக்கு விளைநிலங்களை தயார் செய்ய, பவர் டில்லர் இயந்திரம் மற்றும் விதைகளை மானியத்தில் வழங்க அப்பகுதி மக்கள் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தனர்.ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த சீசனில் விவசாயம் கைவிடப்பட்டால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.மாவடப்பு மலை கிராம மக்கள் கூறியதாவது:வன உரிமை சட்டம், 2006ன்படி, மலை கிராமங்களுக்கு தேவையான வசதிகள் செய்து தர அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். வேளாண் சாகுபடிக்கான இயந்திரங்கள் மற்றும் விதைகளை வேளாண்துறை மானியத்திட்டத்தில் வழங்க அரசுக்கு மனு அனுப்பியுள்ளோம். தென்மேற்கு பருவமழை சீசன் துவங்கும் முன் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை