த.வெ.க., ஆர்ப்பாட்டம்
திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் த.வெ.க., சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் குத்புதீன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், தனியார் பள்ளியில் ஆறு வயது சிறுமியிடம், அத்துமீறலில் ஈடுபட்ட, அசாம் வாலிபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரியும், பள்ளி நிர்வாகம் மற்றும் தமிழக அரசை கண்டித்தும், தொண்டர்கள் கோஷங்களை எழுப்பினர்.