உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிரதான வழித்தடத்தில் குறுகிய பாலத்தால் அவதி

பிரதான வழித்தடத்தில் குறுகிய பாலத்தால் அவதி

உடுமலை; உடுமலை, அமராவதி பிரதான கால்வாய் குறுகிய பாலத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால், பாலத்தை அகலப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உடுமலை - கல்லாபுரம் ரோடு, 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பிரதான வழித்தடமாகவும், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு செல்லும் ரோடாகவும் உள்ளது.இந்த ரோட்டில், கல்லாபுரம், செல்வபுரம் பகுதியில், அமராவதி பிரதான கால்வாய் குறுக்கே, 50 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட குறுகிய பாலம் உள்ளது.வாகன பெருக்கம், மக்கள் தொகை வளர்ச்சி காரணமாக, பாலம் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எதிரே வாகனம் வந்தால், காத்திருந்து கடந்து செல்ல வேண்டியுள்ளது.மேலும், பழமையான இந்த பாலம், பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. கனரக வாகனங்கள் சென்றால், பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, பிரதான ரோட்டிலுள்ள, இந்த பாலத்திற்கு மாற்றாக, இரு வழித்தடத்துடன் புதிய பாலம் கட்ட வேண்டும், என, விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை