உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது

திருப்பூர்; ஊத்துக்குளி ரயில்வே ஸ்டேஷன் பகுதியில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், சந்தேகப்படும் விதமாக, இருவரிடம் விசாரித்தனர். தேனியை சேர்ந்த நாகூர்கனி, 35, தேனியை சேர்ந்த சகுபர் சாதிக், 34 என்பது தெரிந்தது. இருவரும், ஆந்திராவில் இருந்து கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக வாங்கி வந்தது தெரிந்தது. இருவரை கைது செய்து, ஆறு கிலோ கஞ்சா பொட்டலத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். திருப்பூரை சேர்ந்த காசீது, 32 என்பவர் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்று வந்ததால், தெற்கு போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த காரணத்தால், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருப்பூர் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை