உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தடுப்பு சுவரில் மோதி கார் விபத்து உடுமலையில் இருவர் பலி; இருவர் படுகாயம்

தடுப்பு சுவரில் மோதி கார் விபத்து உடுமலையில் இருவர் பலி; இருவர் படுகாயம்

உடுமலை: உடுமலை அருகே, கார் தடுப்புச்சுவர் மீது மோதி ஏற்பட்ட விபத்தில், இருவர் பலியானார்கள். குழந்தை உட்பட இருவர் பலத்த காயமடைந்தனர்.சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை உரத்துாரைச்சேர்ந்த, மருதுபாண்டியன்,35. டென்மார்க் நாட்டில், ஒரு ஓட்டலில் மேலாளராக பணியாற்றி வந்தார். உடன் பணியாற்றும் அவரது நண்பர், தேவகோட்டை உரத்துாரைச்சேர்ந்த பிரபாகரன், 39 ஆகியோர் விடுமுறைக்கு வந்துள்ளனர்.அவர்கள் இருவரும், பிரபாகரன் மனைவி, சிலம்பரசி, 33, மகன் நேத்ரன்,3, ஆகிய நான்கு பேரும், டி.என்.63பிஎக்ஸ் 9293 என்ற எண்ணுள்ள 'மாருதி செலோரியா' காரில் திண்டுக்கல் மாவட்டம், பழநி முருகன் கோவிலுக்கு சென்று விட்டு, நேற்று முன்தினம், திண்டுக்கல்- பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில், கோவை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.காரை பிரபாகரன் ஓட்டி வந்துள்ளார். கார், திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே, குறிஞ்சேரி பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த வாகனம் முந்தி செல்வதற்காக, இடது புறம் திருப்பும் போது, எதிர்பாராத விதமாக, பக்கவாட்டு தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது.இதில், பலத்த காயமடைந்த மருதுபாண்டியன் சம்பவ இடத்திலேயே இறந்தார். உடுமலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக சடலம் கொண்டு வரப்பட்டது. கோவை தனியார் மருத்துமனைக்கு அழைத்து செல்லப்பட்ட பிரபாகரன் மனைவி சிலம்பரசியும் இறந்தார்.பலத்த காயமடைந்த பிரபாகரன், சிறுவன் நேத்ரன் ஆகியோர் கோவை தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து, உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை