உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இணை ஆணையர் அலுவலகத்தில் நிரப்பப்படாத காலி பணியிடங்கள்

இணை ஆணையர் அலுவலகத்தில் நிரப்பப்படாத காலி பணியிடங்கள்

பல்லடம்; அறநிலையத்துறை இணை மற்றும் உதவி ஆணையர் அலுவலகத்தில், காலிப்பணியிடம் நிரப்பப்படாததால், பணிச்சுமையால் அவதிப்பட்டு வருவதாக, கோவில் பணியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ், திருப்பூர், கரூரில் உள்ள இணை மற்றும் உதவி கமிஷனர் அலுவலகங்களில், பல்வேறு காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு, 2022ம் ஆண்டு வெளியிடப்பட்டது.இதன்படி, விண்ணப்பத்தவர்களுக்கான நேர்காணல் நடத்தப்படும், காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக, கோவில் பணியாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.இது குறித்து, கோவில் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:திருப்பூர் மற்றும் கரூரில் உள்ள இணை கமிஷனர், உதவி கமிஷனர் அலுவலகங்களில், அலுவலக உதவியாளர், ஓட்டுநர், இரவு காவலர் ஆகிய, 17 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு, 2022ம் ஆண்டு வெளியிடப்பட்டு, இதற்காக விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணலும் நடத்தப்பட்டது. இரண்டு ஆண்டுகள் ஆகியும் காலிப் பணியிடங்கள் இன்று வரை நிரப்பப்படவில்லை.பணியிடங்கள் நிரப்பப்படாததால், ஏற்கனவே உள்ள பணியாளர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. தற்போது வேலை பார்த்து வரும் பணியாளர்களே, பல்வேறு அலுவலகங்களுக்கும் சுழற்சி முறையில் வேலை பார்க்க அனுப்பப்படுகின்றனர். இதனால், கூடுதல் வேலைப்பளு மற்றும் அலைச்சல் ஏற்படுகிறது.நேர்காணல் நடத்திய பின்னும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்பதற்கு காரணம் புரியவில்லை. எனவே, பணியாளர்களின் பணிச்சுமையை போக்க காலிப் பணியிடங்களை நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி