உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தரம் பிரிக்காத குப்பைகள்; மாநகரம் தவிக்கிறது

தரம் பிரிக்காத குப்பைகள்; மாநகரம் தவிக்கிறது

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகளை கையாள்வதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது. திடக்கழிவு மேலாண்மையில் உரிய மாற்று திட்டங்களும், குப்பைகள் பிரித்து வழங்குவதில் உரிய கண்காணிப்பும் அவசியம். திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 14 லட்சம் பேர் வசிக்கின்றனர். இங்குள்ள 60 வார்டுகளில் தினமும் சராசரியாக 800 மெட்ரிக் டன் அளவிலான குப்பை கழிவுகள் சேகரமாகிறது. வீடுகள், கடைகள், ஓட்டல்கள், மார்க்கெட் மற்றும் சந்தை வளாகங்கள்; வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், விடுதிகள், தொழிற்சாலைகள், பஸ் ஸ்டாண்ட் வளாகம்; தெருவோரக் கடைகள் என குப்பை கழிவுகள் உற்பத்தியாகும் இடங்கள் பல விதங்களில் உள்ளன. துப்புரவுப்பணியில் 2500 ஊழியர்கள் மாநகராட்சி பகுதி முழுவதும் குப்பை சேகரித்து அகற்றும் பணிக்கு தனியார் நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது. இதன் மூலம் ஏறத்தாழ 2,500 துாய்மைப் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். வீடு வீடாகச் சென்று குப்பை சேகரித்தல்; தள்ளு வண்டி மற்றும் பேட்டரி வாகனங்களும், சரக்கு ஆட்டோக்களும் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் பகுதி வாரியாக குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட்டு, அதன் வாயிலாக கழிவுகள் அகற்றப்படுகின்றன. அதே போல் டம்பர் பிளேசர் வாகனங்கள் வாயிலாக குப்பை தொட்டிகளில் நிரப்பப்படும் கழிவுகள் கொண்டு லெ்லப்படுகிறது. ேமலும் வார்டு பகுதிகளில் 'ஹூக்கா பின்' எனப்படும் பெரிய அளவிலான குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டு அதன் வாயிலாகவும் கழிவுகள் அகற்றப்படுகிறது. 15 வார்டுகளில் மட்டுமே குப்பைகள் தரம் பிரிப்பு துாய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் கூறியதாவது: மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 15 வார்டுகளில் மட்டுமே குப்பைகள் தரம் பிரித்து வழங்கப்படுகிறது. இவற்றை எங்களால் எளிதில் கையாள முடிகிறது. மக்கும் குப்பை, மக்காத குப்பை என சேகரிக்கும் போதே தனித்தனியாக இருப்பதால் அவற்றை உரிய பயன்பாட்டுக்கு அனுப்பி விடுகிறோம். தற்போது இயன்ற வரை குப்பைகள் தரம் பிரிக்கும் பணியை மேற்கொண்டு துாய்மைப் பணியாளர்களும் இதற்கான மையங்களில் மேற்கொண்டு வருகிறோம். இங்குள்ள 45 வார்டுகளிலும் குப்பைகள் தரம் பிரித்து வழங்குவதில்லை. அவற்றை பிரிக்க முடியாத வகையிலும் வழங்கி விடுகின்றனர். மேலும், பெரும்பாலான இடங்களில் தொழிற்சாலை கழிவுகள் மொத்தமாக கொண்டு வந்து கொட்டிச் செல்கின்றனர். இவற்றை அகற்றுவதும் பெரும் சிரமமாக உள்ளது. நிறுவனங்கள் உரிய திடக்கழிவு மேலாண்மைக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இதை பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கானோர் செலுத்தாமல் உள்ளனர். இரவில் பொது இடங்களில் கொட்டப்படும் குப்பைகள் இந்நிறுவனங்கள் இரவு நேரங்களில் அதிகளவிலான கழிவுகளை தரம் பிரிக்காமல் குப்பை தொட்டிகளில், பொது இடங்களில் கொட்டிச் செல்கின்றனர். வீடுகளில் இது குறித்து உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விதிமீறுவோருக்கு தண்டனை இல்லை குப்பைகள் தரம் பிரித்து பெறும் நிலையில், திடக்கழிவு மேலாண்மையில் நிச்சயம் வெற்றி பெற முடியும். இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பாலிதீன் பொருட்கள் குறித்து தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு விதிமீறல்கள் தண்டிக்கப்பட வேண்டும். குப்பையிலிருந்து பயோ காஸ், மின்சாரம் உற்பத்தி போன்ற திட்டங்களை மாநகராட்சி நிர் வாகம் முன்னெடுத்துள்ளது. இவற்றுக்கான நிதி ஒதுக்கீடு செய்து அவற்றை விரைவில் செயல்படுத்த வேண்டும். திருப்பூர் மாநகராட்சி குப்பை பிரச்னைக்கு தீர்வு காண மாநில அரசு சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். --- குப்பைகள் பல ரகம்... எதனால் சங்கடம்? திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், தற்போது மாநகராட்சி பகுதியில் நுண் உர உற்பத்தி மையம் வாயிலாக காய்கறி கழிவுகள் உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. இறைச்சி கழிவுகளை தனியார் நிறுவனம், செல்லப் பிராணிகளுக்கு உணவு தயாரிக்கும் நிறுவனங்களுக்குச் செல்கிறது. பிளாஸ்டிக் மற்றும் பாலிதின் கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு, சிெமன்ட் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பயனுள்ள வகையில் மறு பயன்பாட்டுக்கு செல்லும் காகிதங்கள், அட்டைகள் ஆகியன துாய்மைப் பணியாளர்கள் வாயிலாக கடைகளில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இவற்றையெல்லாம் கடந்து சேகரமாகும் குப்பை கழிவுகள் தான் நிர்வாகத்துக்கும், துாய்மைப் பணியாளர்களுக்கும் பெரும் சவாலாக அமைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை