உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  கேரள கழிவுகள் கொட்டப்பட்டதா?

 கேரள கழிவுகள் கொட்டப்பட்டதா?

பொங்கலுாருக்கு அருகிலுள்ள சிங்கனுாரில் குட்டைகள், சிறிய அளவிலான தடுப்பணைகள் உள்ளன. அங்குள்ள நீர்நிலை புறம்போக்கில் சில விஷமிகள் சரக்கு வாகனங்களில் குப்பைகளை கொண்டு வந்து மலை போல் குவித்துள்ளனர். மீண்டும் அதே இடத்தில் சரக்கு வாகனங்களில் கொண்டு வந்து குப்பை கொட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூறுகையில், ''வெளிமாநிலங்களில் இருந்து, குறிப்பாக கேரளாவில் இருந்து லாரிகளில் கொண்டு வந்து குப்பையை கொட்டி இருக்கலாம் அல்லது பழைய இரும்பு வியாபாரிகள் கழிவுகளை கொட்டி இருக்கலாம். அதிக கனமழை பெய்தால் இவை அனைத்தும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு நீர் வழித்தடத்தை அடைத்துக் கொள்ளும். எனவே, தண்ணீர் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளது. யார் குப்பை கொட்டினாலும், பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை