உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உங்களுக்காக ெஹல்மெட், சீட்பெல்ட் அணியுங்கள்

உங்களுக்காக ெஹல்மெட், சீட்பெல்ட் அணியுங்கள்

பல்லடம்: சுல்தான்பேட்டை வின்ட் சிட்டி ரோட்டரி சங்கம், பல்லடம் இமைகள் ரோட்டரி சங்கம், போக்குவரத்து போலீசார் இணைந்து, போக்கு வரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை, பல்லடத்தில் நேற்று நடத்தினர். வின்ட் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் சண்முக சுந்தரம் தலைமை வகித்தார். செயலாளர் பிரபாகரன், திட்ட சேர்மன் கனகராஜ், இமைகள் ரோட்டரி சங்கத் தலைவர் சுந்தர்ராஜன், செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் மனோஜ் அகர்வால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பிரபாகரன் கூறுகையில், 'ஹெல்மெட், சீட் பெல்ட் அணியுங்கள் என, தொடர்ந்து வலியுறுத்துவது உங்களின் நலனுக்காகவே. ஹெல்மெட் அணிவது உயிருக்கு பாதுகாப்பு என்பதுடன், எதிர்பாராமல் ஏற்படும் விபத்துக்களின்போது காப்பீடு பெறவும் உதவும்' என்றார். ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்பு, மரக்கன்று, பேனா உள்ளிட்டவை வழங்கப்பட்டன. வாகனங்களின் முகப்பு விளக்கில் போலீசார் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி