உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கச்சேரி வீதியில் ஸ்தம்பிக்கும் போக்குவரத்து நிரந்தர தீர்வு எப்போது?

கச்சேரி வீதியில் ஸ்தம்பிக்கும் போக்குவரத்து நிரந்தர தீர்வு எப்போது?

உடுமலை;அரசு அலுவலகங்கள் வரிசையாக அமைந்துள்ள பிரதான ரோட்டில், போக்குவரத்து நெரிசல் குறையாமல் இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் திணறி வருகின்றனர்; நிரந்தர தீர்வுக்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை நகரிலுள்ள கச்சேரி வீதியில், தாலுகா அலுவலகம், கிளைச்சிறை, கோர்ட், சார்பதிவாளர் அலுவலகம், சார்நிலை கருவூலம், தலைமை தபால் நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் வரிசையாக அமைந்துள்ளன.அரசு மருத்துவமனைக்கும் இவ்வழியாகவே வாகனங்கள் செல்கின்றன. முக்கியத்துவம் வாய்ந்த ரோட்டில், போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாக உள்ளது. அரசு அலுவலகங்களுக்கு வரும் வாகனங்கள் ரோட்டிலேயே நிறுத்தப்படுவது முக்கிய பிரச்னையாக உள்ளது.இதனால், ரோடு குறுகலாக மாறி, காலை, மாலை நேரங்களில், வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. அரசு மருத்துவமனைக்கு செல்லும், ஆம்புலன்ஸ்களும் நெரிசலில் சிக்கிக்கொள்வது தொடர்கதையாக உள்ளது.இப்பிரச்னைக்கு தீர்வாக, தாலுகா அலுவலகம் எதிரில், நகராட்சிக்கு சொந்தமான காலியிடம் பார்க்கிங் பகுதியாக மாற்றப்பட்டது.ஆனால், பெரும்பாலான வாகனங்கள் அங்கு நிறுத்தப்படுவதில்லை; தாலுகா அலுவலக வளாகத்திலும் வாகனங்களை நிறுத்துவதில்லை.போக்குவரத்து போலீசார், கச்சேரி வீதியில், நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் போது, வாகன ஓட்டுநர்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.இதனால், சில நாட்கள் மட்டும் ரோந்து சென்ற போலீசார், பின்னர் கச்சேரி வீதியை கண்டுகொள்வதில்லை. நீண்ட காலமாக நீடிக்கும் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.பார்க்கிங் பகுதியில், வாகனங்களை நிறுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ரோட்டையொட்டி தாறுமாறாக நிறுத்தும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவசியமாகியுள்ளது.நிரந்தர தீர்வு காண, அனைத்து அரசுத்துறைகளையும் ஒருங்கிணைத்து, ஆலோசனைகளை பெற்று, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ