வாக்காளர்கள் குறைந்தது ஏன்?அன்றே சுட்டிக்காட்டிய தினமலர்
திருப்பூர் சட்டமன்ற தொகுதிகளை பொறுத்தவரை, தொழி லாளர்கள் நிறைந்த திருப்பூர் வடக்கு, தெற்கில் வாக்காளர் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருக்கிறது. 'இத்தகைய சூழல் வரும்' என, 'தினமலர்' நாளிதழில் வெளியான செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டது.திருப்பூரை பொறுத்தவரை வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில், வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வழங்குவதில் பெரும் சிரமத்தை பி.எல்.ஓ.,க்கள் எதிர்கொண்டனர். உதாரணமாக, ஒரு பாகத்தில், 1,200 வாக்காளர்கள் வசிப்பதாக பட்டியலில் இருந்தால், அங்கு சென்று பார்க்கும் போது, 500 பேர் வரை தான் அடையாளம் காண முடிந்ததாக அவர்கள் கூறினர். மற்றவர்கள், வேறு வேறு இடங்களுக்கோ, ஊர்களுக்கோ சென்றிருப்பதும், அவர்களை தேடி கண்டுபிடிப்பதும், சிரமமான காரியமாக இருக்கிறது என்ற பி.எல்.ஓ.,க்களின் மனக்குமுறலை 'தினமலர்' நாளிதழ் சுட்டிக் காட்டியிருந்தது.