உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தற்காலிக பார்க்கிங் வளாகம் கவனம் பெறாதது ஏன்?

தற்காலிக பார்க்கிங் வளாகம் கவனம் பெறாதது ஏன்?

திருப்பூர் ; தீபாவளியையொட்டி மாநகரில் வாகனங்கள் பார்க்கிங் செய்ய குறிப்பிட்ட பகுதிகளில் இடங்கள் கண்டறிந்து அறிவிப்புகள் வைக்கப்பட்டன. குமரன் ரோட்டில் புதிதாக கட்டி முடித்த, பல அடுக்கு வாகன பார்க்கிங் வளாகம் தற்காலிகமாக திறக்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் எதிர்பார்த்த அளவில் இங்கு வாகனங்கள் பார்க்கிங் செய்ய வரவில்லை.பொதுமக்கள் கூறுகையில், ''இந்த பார்க்கிங் வளாகம் பெருமளவு கடைகள் உள்ள பகுதியில் இல்லாமல் இருந்தது. மேலும் பார்க்கிங் கட்டணம் மல்டி பிளக்ஸ் தியேட்டர், மால் போன்ற இடங்கள் போல் அதிகம். மேலும், 24 மணி நேரம் இயங்காமல் காலை 9:00 முதல் இரவு 10:00 மணி வரை மட்டுமே இயங்கியது. கட்டணம் குறைவாக இருந்து, 24 மணி நேரமும் இயங்கியிருந்தால், வெளியூர் செல்வோர் கூட தற்போது ஆயிரக்கணக்கில் வாகனங்களை நிறுத்திச் சென்றிருப்பர். கடந்த 5 நாட்களாகவே பிற பகுதி வாகன பார்க்கிங் வளாகங்கள் நிரம்பி காணப்படுகிறது. அதை விட இந்த வளாகம் மழை, வெயில் பாதிப்பின்றி வாகனங்கள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருக்கும்'' என்றனர்.மாநகராட்சி தரப்பில் கூறுகையில், ''பண்டிகை நெரிசலைக் கணக்கிட்டு தற்காலிகமாகத் தான் திறக்கப்பட்டது. முறைப்படி டெண்டர் விட்ட பின்னர் அது முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி