பிரதான ரோட்டில் ஆக்கிரமிப்பு நகராட்சி கண்டுகொள்ளுமா?
உடுமலை; உடுமலை ராஜேந்திரா ரோட்டில் காணப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலையில் பிரதான ரோடுகளில் ஒன்றாக ராஜேந்திரா ரோடு உள்ளது. இந்த ரோட்டில் நகராட்சி சந்தை, அரசு மேல்நிலைப்பள்ளி, கேந்திரிய வித்யாலயா, வணிக நிறுவனங்கள், ரயில்வே ஸ்டேஷ் உள்ளன. இதனால், போக்குவரத்து அதிகளவில் காணப்படும். இந்த ரோட்டில், தள்ளுவண்டிகள், கடைகளின் ஆக்கிரமிப்புகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து பல முறை நகராட்சிக்கு மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, நகராட்சியினரும், போலீசாரும் இணைந்து, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.