உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குடிநீர் வினியோகிப்பாளரை கண்டித்து பெண்கள் முற்றுகை

குடிநீர் வினியோகிப்பாளரை கண்டித்து பெண்கள் முற்றுகை

பல்லடம்; பல்லடம் ஒன்றியம், கே. கிருஷ்ணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட காமநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் சிலர், நேற்று, பல்லடம் பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.அவர்கள் கூறியதாவது:ஊராட்சிக்கு உட்பட்ட, 4 மற்றும் 5வது வார்டுகளுக்கு தேவையான தண்ணீர் இருந்தும், சரிவர வினியோகிக்கப்படுவதில்லை. குடிநீர் வினியோகிப்பாளரிடம் கேட்டால், தகாத வார்த்தையில் பெண்களை கொச்சைப்படுத்தி வசை பாடுவதோடு, தண்ணீரை வேண்டுமென்றே இருப்பு வைத்துக் கொண்டு, பொதுமக்களுக்கு வினியோகிக்காமல் உள்ளார்.ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்ட பின், இப்பகுதிக்கு தனியாக குடிநீர் வினியோகிப்பாளர் நியமிக்கப்பட்டார். இதனால், வாரத்துக்கு இருமுறை முறையாக தண்ணீர் வந்தது.ஆனால், தண்ணீர் வினியோகிக்க கூடாது என, புதிதாக நியமிக்கப்பட்டவரிடம், பழைய வாட்டர் மேன் வற்புறுத்தி வருகிறார். இதனால், மீண்டும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.எனவே, பழைய குடிநீர் வினியோகிப்பாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக நியமிக்கப்பட்ட குடிநீர் வினியோகிப்பாளருக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தாத வகையில் நடவடிக்கை எடுத்து, குடிநீர் வினியோகத்தையும் சீர்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பி.டி.ஓ., கனகராஜ், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனால், பெண்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை