உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மகளிர் கபடி; கோவை கல்லுாரி முதலிடம்

மகளிர் கபடி; கோவை கல்லுாரி முதலிடம்

அனுப்பர்பாளையம்; பாரதியார் பல்கலை சார்பில், கல்லுாரிகளுக்கான மகளிர் கபடி போட்டி வஞ்சிபாளையம் தீரன் சின்னமலை கல்லுாரி வளாகத்தில் நடந்தது. இதில், 17 கல்லுாரிகளைச் சேர்ந்த வீராங்கனையர் பங்கேற்றனர். போட்டியில், கோவை கே.எஸ்.ஜி. கல்லுாரி முதல் இடத்தையும், திருப்பூர் ஏ.வி.பி. கல்லுாரி இரண்டாம் இடத்தையும், கோவை நிர்மலா கல்லுாரி மூன்றாம் இடத்தையும், திருப்பூர் கே.ஜி. கல்லுாரி நான்காம் இடத்தையும் பெற்றனர். பரிசளிப்பு விழாவுக்கு, தீரன் சின்னமலை கல்லூரி தாளாளர் கோவிந்தப்பன், தலைமை வகித்தார். கொங்கு வேளாளர் அறக்கட்டளை துணைத் தலைவர் முருகசாமி முன்னிலை வைத்தார். திருப்பூர் மாவட்ட கபடி கழக சேர்மன் முருகேசன், மாநில பொருளாளரும் மாவட்ட கபடி கழக செயலாளருமான ஜெயசித்ரா சண்முகம் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். விழாவில், மாவட்ட கபடி கழக தலைவர் மனோகரன், பொருளாளர் ஆறுச்சாமி, துணை சேர்மன் முருகானந்தம், துணைத் தலைவர் ராமதாஸ், பி.ஆர்.ஓ. சிவபாலன், நடுவர் குழு சேர்மன் முத்துசாமி மற்றும் கொங்கு வேளாளர் அறக்கட்டளை நிர்வாகிகள் கிரிரங்கசாமி, காளியப்பன், அம்மாவாசை குட்டி, சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை