மேலும் செய்திகள்
காத்திருப்பு போராட்டம்
31-Aug-2025
உடுமலை; போக்குவரத்து கழக அலுவலகம் முன், தொழிலாளர்களுக்கு ஆதரவாக சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகம் முழுவதும், அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள், பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், வாரிசுகளுக்கு வேலை, ஓய்வூதிய நிலுவைத்தொகை, ஓய்வூதியர் மருத்துவ காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த, 15 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அரசு போக்குவரத்துக்கழக கிளை அலுவலகம் முன், சி.ஐ.டி.யு., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு., மாவட்ட துணைச்செயலாளர் ஜெகதீசன் தலைமை வகித்தார். போக்குவரத்து தொழிலாளர் சங்க நிர்வாகி கார்த்தி, பொது தொழிலாளர் சங்கம் ரங்கநாதன், டெய்லர் சங்கம் பி. ரத்தினசாமி, அங்கன்வாடி ஊழியர் சங்கம், சித்ரா, எல்லம்மாள், வெண்ணிலா, பஞ்சாலை சங்கம் செல்வராஜ், கட்டுமான தொழிலாளர் சங்கம் கனகராஜ், மின் ஊழியர் மத்திய அமைப்பு ஜெகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
31-Aug-2025