திறனறித்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
உடுமலை; அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேசிய வருவாய்வழி திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது தேர்வு தேதி மற்றும் விண்ணப்பிப்பதற்கான அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டுக்கான தேசிய வருவாய்வழி திறனறித்தேர்வு பிப்., 22ம் தேதி நடக்கிறது.இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, தற்போது இணையதளத்தில் விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது. அதில், www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை, தற்போது பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களிடம் வழங்க வரும் 24ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.