மேலும் செய்திகள்
வாலிபருக்கு அரிவாள் வெட்டு ஒருவர் கைது; இருவர் தலைமறைவு
16 hour(s) ago
மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி
16 hour(s) ago
சேத்துப்பட்டு:பெங்களூருவிலிருந்து பயணியரை ஏற்றிக்கொண்டு நேற்று அதிகாலை, 5:00 மணியளவில் சேத்துப்பட்டு வழியாக, செய்யாறு நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இதில், 20க்கும் மேற்பட்ட பயணியர் பயணம் செய்தனர். பஸ்சை, செங்கம் பூண்டி கிராமத்தை சேர்ந்த ராமு, 46, ஓட்டி சென்றார். களம்பூர் பகுதியை சேர்ந்த கண்டக்டர் நவநீதகிருஷ்ணன் பணியில் இருந்தார்.சேத்துப்பட்டு பைபாஸ் சாலை வழியாக சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் விவசாய நிலத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், 12 பேர் காயமடைந்து, திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சேத்துப்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.
16 hour(s) ago
16 hour(s) ago