மேலும் செய்திகள்
வாலிபருக்கு அரிவாள் வெட்டு ஒருவர் கைது; இருவர் தலைமறைவு
37 minutes ago
மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி
37 minutes ago
செய்யாறு:செய்யாறு அருகே, விருப்ப பாடல்களைக் கேட்டு, இன்னிசை கச்சேரியில் தகராறு செய்த விவசாயியை தாக்கிய இருவரை, போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், சிறுவஞ்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தென்னவன், 30, விவசாயி. நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் நடந்த ஓசூரம்மன் ஆடி திருவிழாவில், இன்னிசை கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.பாடகர்கள் பாடல்களை பாடியபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அரிபாபு, 28, டிரைவர் சீனிவாசன், 31, ஆகியோர், தாங்கள் விரும்பிய சில பாடல்களை பாடும்படி தொந்தரவு செய்தனர். ஆனால், பாடகர்கள் வேறு பாடல்களை பாடினர். ஆத்திரமடைந்த இருவரும், 'மின்சாரத்தை துண்டித்து கச்சேரி நடக்காமல் தடுப்போம்' எனக்கூறி, அங்குள்ள டிரான்ஸ்பார்மரை 'ஆப்' செய்ய முயன்றனர். இதை தென்னவன் தடுத்தார். இதில், இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.ஆத்திரமடைந்த அரிபாபு, சீனிவாசன் ஆகிய இருவரும் சேர்ந்து இரும்பு ராடால் தாக்கியதில், தென்னவன் படுகாயமடைந்தார். பிரம்மதேசம் போலீசார், அரிபாபு மற்றும் சீனிவாசனை கைது செய்தனர்.
37 minutes ago
37 minutes ago