மேலும் செய்திகள்
வாலிபருக்கு அரிவாள் வெட்டு ஒருவர் கைது; இருவர் தலைமறைவு
14 hour(s) ago
மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி
14 hour(s) ago
செங்கம்:திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி, 28, இவர் வங்கியில் கடன் பெற்று கார் வாங்கி வாடகைக்கு விட்டு வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன், இவரிடம் வேலுாரை சேர்ந்த சுரேஷ் என்பவர் மொபைல்போன் வாயிலாக தொடர்பு கொண்டு, நான் வேலுாரில் நடத்தி வரும் டிராவல்ஸிற்கு காரை ஒப்பந்த அடிப்படையில் வழங்கினால், உங்களுக்கு அதிகளவில் பணம் தருகிறேன் என்று கூறினார்.இதை நம்பிய திருமூர்த்தி, சுரேஷ் என்பவரிடம் காரை ஒப்படைத்தார். அதன் பின்னர், சுரேஷ் கூறியபடி, திருமூர்த்திக்கு பணமும் தரவில்லை, அவரை தொடர்பு கொண்டால், மொபைல் போன் 'சுவிட்ச் ஆப்' என வந்தது. இதனால், சுரேஷ் கூறிய முகவரிக்கு, திருமூர்த்தி சென்று பார்த்தபோது, அந்த முகவரியில் இயங்கும் டிராவல்ஸிற்கும், சுரேஷிற்கும் எந்த தொடர்பும் கிடையாது என்பது தெரியவந்தது. திருமூர்த்தி புகாரின்படி, செங்கம் போலீசார், சுரேஷ், 28, உடந்தையாக செயல்பட்ட காஞ்சிபுரத்தை சேர்ந்த சதீஷ், 28, ஆகிய இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.
14 hour(s) ago
14 hour(s) ago