மேலும் செய்திகள்
வாலிபருக்கு அரிவாள் வெட்டு ஒருவர் கைது; இருவர் தலைமறைவு
3 hour(s) ago
மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி
3 hour(s) ago
பப்பாளி மரத்தை வெட்டியபோது மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி
16 hour(s) ago
வந்தவாசி:திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மழையூர் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி, 72. இவர் மனைவி குப்பம்மாள், 65. தம்பதிக்கு சீனுவாசன், 52, பாலகிருஷ்ணன், 50, பாபு, 45, என்ற மகன்களும், சரசு, 43, என்ற மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி, சென்னையில் கூலி வேலை செய்து வருகின்றனர். மகன்கள் மூவரும் சென்னையில் உள்ள நிலையில், முனுசாமி, குப்பம்மாள் இருவரும் மழையூர் கிராமத்தில் வசிக்கின்றனர். இருவருக்கும் சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு உள்ளதால், இவர்களை கவனித்து கொள்ள யாரும் இல்லாத நிலையில், மனமுடைந்த தம்பதி, விஷம் குடித்தனர். அவர்களது வீட்டின் கதவு திறக்காமல் இருப்பதை கண்டு, அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது, இருவரும் மயங்கி கிடந்துள்ளனர். அவர்களை மீட்டு, வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் குப்பம்மாள் உயிரிழந்தார். சீனுவாசன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். வடவணக்கம்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
16 hour(s) ago