உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / குவாரியிலிருந்து பறந்து வந்த கல் தலையில் விழுந்து விவசாயி பலி

குவாரியிலிருந்து பறந்து வந்த கல் தலையில் விழுந்து விவசாயி பலி

வந்தவாசி : திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, செப்டாங்குளத்தை அடுத்த எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம், 38. நேற்று முன்தினம் மாலை, விவசாய நிலத்தில், நெற்பயிருக்கு பூச்சி மருந்து தெளித்துக் கொண்டிருந்தார். அப்போது அருகே தனியார் குவாரியில் பாறையை உடைக்க வெடி வைத்துள்ளனர். வெடி வெடித்ததில் பறந்து வந்த கல், ஆறுமுகம் தலையில் விழுந்தது.படுகாயமடைந்தவரை, பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று முன்தினம் இரவு இறந்தார். வட வணக்கம்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை