உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / தி.மலை கோவிலில் ஆடிப்பூர கொடியேற்றம்

தி.மலை கோவிலில் ஆடிப்பூர கொடியேற்றம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள அம்மன் சன்னிதியில் நேற்று காலை, சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்ற விழா நடந்தது. இதையொட்டி, விநாயகர் மற்றும் உற்சவர் பராசக்தி அம்மன் ஆகியோர், அம்மன் சன்னிதி முன் கொடி மரம் அருகே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.விழா நடக்கும் 10 நாட்களும் தினமும் காலை, மாலை வேளைகளில், பராசக்தி அம்மன், மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நிறைவு நாளான 10 நாள் விழா, ஆக., 7 மாலையில், கோவில் வளாகத்திலுள்ள சிவகங்கை தீர்த்தக் குளக்கரையிலுள்ள, வளைகாப்பு மண்டபத்தில் பராசக்தி அம்மன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.பின், பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம், இரவு அம்மன் வீதி உலா, இரவு 10:00 மணிக்கு மேல், கோவில் வளாகத்தில் அம்மன் சன்னிதி முன், தீமிதி விழா நடக்க உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி