உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / சாலையோர வியாபாரிகளை அகற்றியதற்கு எதிராக தர்ணா

சாலையோர வியாபாரிகளை அகற்றியதற்கு எதிராக தர்ணா

திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பூஜை பொருட்களை வாங்கி செல்ல வசதியாக, கடந்த, 40 ஆண்டுகளுக்கும் மேலாக, 50க்கும் மேற்பட்ட சாலையோர கடை வியாபாரிகள், கோவில் ராஜகோபுரம் எதிரில், பூஜை பொருட்களை விற்கின்றனர். தற்போது, தி.மு.க., ஆட்சியில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சாலையோர வியாபாரிகளை அகற்றி விட்டு, தனி நபருக்கு பூஜை பொருட்கள் விற்பனை செய்ய டெண்டர் விட அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.இதனால், ஆத்திரமடைந்த சாலையோர கடை வியாபாரிகள் நேற்று, அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நடந்ததால், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அங்கு இருந்தனர். இதனால், சாலையோர வியாபாரிகள் கலைந்து சென்றனர். 'கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்' என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி