உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / தீபாவளி சீட்டு நடத்தி ரூ.3 கோடி மோசடி செய்தவர் கைது

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.3 கோடி மோசடி செய்தவர் கைது

திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டம், நாச்சானந்தலை சேர்ந்தவர் வாசு, 48. இவர், தீபாவளி சீட்டு நடத்தி, தங்க நாணயம், வெள்ளி நாணயம், பட்டாசு, ஸ்வீட் மற்றும் காரம் போன்ற பரிசு பொருட்கள் தருவதாக, பொதுமக்களிடம் தெரிவித்து, பணம் வசூல் செய்து, 3 கோடி ரூபாய் வசூல் செய்து, பணம் கட்டியவர்களுக்கு பரிசு பொருட்களை தராமல் மோசடி செய்தார்.இது குறித்து, நாச்சானந்தல் கிராமத்தை சேர்ந்த சக்தி என்பவர் கொடுத்த புகார் படி, திருவண்ணாமலை குற்றப்பிரிவு போலீசார், நேற்று வாசுவை கைது செய்தனர். மேலும், பணம் கட்டி ஏமாந்தவர்கள், திருவண்ணாமலை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ