உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / பெண் அலுவலர்களிடம் அத்துமீறி பேச்சு வன அலுவலர் சஸ்பெண்ட்

பெண் அலுவலர்களிடம் அத்துமீறி பேச்சு வன அலுவலர் சஸ்பெண்ட்

தண்டராம்பட்டு:திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனுார் அணை, வனச்சரக அலுவலராக சீனுவாசன், 50, என்பவர் பணிபுரிந்தார். இவர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடும்போது, மது அருந்திவிட்டு, பெண் பணியாளர்களிடம், அத்துமீறி பேசியுள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் பணியாளர்கள், வேலுார் மண்டல பொறுப்பு வன பாதுகாவலர் ராகுலுடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, அவரை சஸ்பெண்ட் செய்து, மண்டல வன பாதுகாவலர் நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை