மேலும் செய்திகள்
வாலிபருக்கு அரிவாள் வெட்டு ஒருவர் கைது; இருவர் தலைமறைவு
10 hour(s) ago
மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி
10 hour(s) ago
பப்பாளி மரத்தை வெட்டியபோது மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி
23 hour(s) ago
திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலிலுள்ள 63 சன்னிதிகளில், 500க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன. முக்கிய சன்னிதிகளில் உள்ள சுவாமிகளுக்கு தினமும் அபிஷேகம் செய்யப்படுகிறது. பிற சுவாமி சிலைகளுக்கு விசேஷ நாட்களிலும் அபிஷேகம் செய்து புதிய, வேட்டி, சேலை அணிவிக்கப்படும். கடந்த பவுர்ணமியில் அம்மன் சன்னிதி நுழைவாயிலிலுள்ள பெண் காவல் தெய்வத்திற்கு, அரசின் இலவச சேலை கட்டப்பட்டிருந்தது. இதை சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் ஒருவர் மொபைல்போனில் படம் எடுத்து வைரலாக்கினார். கோவில் நிர்வாகம் உடனடியாக அந்த சேலையை மாற்றியது. அரசின் இலவச சேலை, எப்படி அம்மன் சிலைக்கு வந்தது என பலரும் கேள்வி எழுப்பினர். இது குறித்து கோவில் இணை ஆணையர் ஜோதி கூறுகையில், ''கடந்த ஜன., ல் நடந்த திருவூடல் திருவிழாவில், சுவாமி வீதிஉலாவின் போது பக்தர்கள் நேர்த்திக்கடனாக, சேலை, வேட்டி வழங்கினர். அப்போது யாரோ அரசின் இலவச புடவையை வழங்கியுள்ளனர். அதை கவனியாமல் பெண் காவல் தெய்வத்திற்கு அணிவிக்கப்பட்டது. ஊழியர்கள் கவனத்திற்கு வந்த பின் உடனடியாக மாற்றப்பட்டது,'' என்றார்.
10 hour(s) ago
10 hour(s) ago
23 hour(s) ago