உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / மின்வேலியில் சிக்கி மாணவர் பலி

மின்வேலியில் சிக்கி மாணவர் பலி

போளூர்:திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த அலங்காரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாவலன், 19; தனியார் கல்லுாரி மாணவர். கடந்த, 7ம் தேதி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் இவரை தேடிய நிலையில், நேற்று முன்தினம் மாலை, பக்கத்து கிராமமான விளாப்பாக்கத்தில் ராஜேந்திரன் என்பவரது விவசாய நிலத்தில் அமைத்திருந்த திருட்டு மின்வேலியில் சிக்கி பலியானது தெரியவந்தது. வனத்தை ஒட்டிய விவசாய நிலத்தில், வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்க, ராஜேந்திரன் ரகசியமாக மின்வேலி அமைத்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி