உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / சிறுமிக்கு பாலியல் தொல்லைவாலிபருக்கு 10 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லைவாலிபருக்கு 10 ஆண்டு சிறை

திருவண்ணாமலை::திருவண்ணாமலை மாவட்டம், மேல்பாலுாரை சேர்ந்த வாலிபர்கள் ராஜ்குமார், 25, மற்றும் கோபால், 24. கடந்த, 2008 டிச., 24ல் சிறுமி ஒருவரை மிரட்டி, முட்புதர் நிறைந்த பகுதிக்கு ராஜ்குமார் கடத்தி சென்று, பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டார். அப்போது உடனிருந்த கோபாலும், சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றார். போளூர் அனைத்து மகளிர் போலீசார், ராஜ்குமார் மற்றும் கோபாலை போக்சோவில் கைது செய்தனர். இது குறித்த வழக்கு, திருவண்ணாமலை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுஜாதா, ராஜ்குமாருக்கு, நேற்று, 10 ஆண்டு சிறை, கோபாலுக்கு, 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி