உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை /  கார் - அரசு பஸ் மோதி விபத்து; 3 பேர் பலி

 கார் - அரசு பஸ் மோதி விபத்து; 3 பேர் பலி

வேட்டவலம்: வேட்டவலம் அருகே கார் மீது அரசு பஸ் மோதியதில், மாமியார், மருமகள் உட்பட மூன்று பேர் பலியாகினர். திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலையை சேர்ந்தவர் பவுனம்மாள், 70. உடல்நலம் பாதிக்கப்பட்ட அவரை, விழுப்புரத்திலுள்ள மருத்துவ மனைக்கு நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, 'டவேரா' காரில், அவரது மகன்கள் சக்திவேல், 45, கோவிந்தராஜ், 42, சக்திவேலின் மனைவி கனகவல்லி, 36, அவரது தந்தை கலைவாணன், 60, ஆகியோர் அழைத்துச் சென்றனர். திருவண்ணாமலை - விழுப்புரம் சாலையில், ராஜந்தாங்கல் கிராமம் அருகே கார் சென்றபோது, எதிரே திருவண்ணாமலை நோக்கி வந்த அரசு பஸ் கார் மீது பயங்கரமாக மோதியது. இதில், கார் அப்பளமாக நொறுங்கியது. காரின் இடிபாடுகளில் சிக்கி, கனகவல்லி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த கோவிந்தராஜ், சக்திவேல், கலைவாணன், பவுனம்மாள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், கலைவாணன், பவுனம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். வேட்டவலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Jayaraman
டிச 26, 2025 07:11

Median இல்லாத அனைத்து சாலைகளிலும், நடுவில், 2 அடி அகலத்திற்கு , வெள்ளை கோடுகளை விட்டு விட்டு போடுவது அவசியமாகும்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை