உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டி காப்பாற்ற முயன்ற தம்பதி பலி

கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டி காப்பாற்ற முயன்ற தம்பதி பலி

போளூர்:திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த பெரியகரம் பஞ்., மதுரா காந்தி நகரைச் சேர்ந்த விவசாயி குமார், 30. இவர் மனைவி வளர்மதி, 27.இவர்களது ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்தபோது விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. இதைப் பார்த்த வளர்மதி ஆட்டுக்குட்டியை காப்பாற்ற கிணற்றில் குதித்தார். மனைவி தவறி விழுந்து விட்டார் என நினைத்து, குமாரும் கிணற்றில் குதித்தார். இதில், இருவரும் நீரில் மூழ்கி பலியாயினர்.போளூர் போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டனர். இறந்த தம்பதிக்கு, 9 மற்றும் 7 வயதில் மகன்கள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை