உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / அ.தி.மு.க. - பஞ். தலைவரை கைது செய்யக்கோரி மறியல்

அ.தி.மு.க. - பஞ். தலைவரை கைது செய்யக்கோரி மறியல்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அடுத்த ஓட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் யசோதா, 65. கடந்த, 18ம் தேதி இறந்த அவரது உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்திய போது, இரு தரப்பினருக்கு இடையே முன் விரோதத்தால் தகராறு ஏற்பட்டது.இதில், அ.தி.மு.க.வை சேர்ந்த துரிஞ்சாபுரம் பஞ். தலைவர் கோவிந்தசாமி, 45, ஓட்டேரியை சேர்ந்த பாலாஜி, 23, சம்பத், 54, உள்ளிட்ட ஆறு பேர்,புதுமல்லவாடி கிராமத்தை சேர்ந்த எலக்ட்ரீஷியன் சுப்பிரமணி, 54, என்பவரை, கல்லால் அடித்து காயப்படுத்தினர்.திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சுப்பிரமணி, 19ம் தேதி அதிகாலை உயிரிழந்தார். அவரது உடலுக்கு நேற்று, புதுமல்லவாடி கிராமத்தில் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த உறவினர்கள், அவரை அடித்துக்கொலை செய்து தப்பியோடிய ஆறு பேரையும் கைது செய்ய வலியுறுத்தி,திருவண்ணாமலை - வேலுார் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.திருவண்ணாமலை தாலுகா போலீசார், உரியநடவடிக்கை எடுப்பதாக கூறியதால், மறியலை கைவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை