உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / அருணாசலேஸ்வரர் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.6.21 கோடி

அருணாசலேஸ்வரர் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.6.21 கோடி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக, 6.21 கோடி ரூபாய் செலுத்தியிருந்தனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் 14 கி.மீ., சுற்றளவு உள்ள கிரிவலப்பாதையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலிற்கு சொந்தமான அஷ்டலிங்கம் உள்ளிட்ட கோவில்களில், பக்தர்கள் செலுத்தும் காணிக்கை உண்டியல்கள் மாதம் ஒரு முறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். புரட்டாசி மாத பவுர்ணமி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்தில் நடந்தது. இதில், 6 கோடியே, 21 லட்சத்து, 74 ஆயிரத்து, 473 ரூபாய், 245 கிராம் தங்கம், 2264 கிராம் வெள்ளியை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை