மேலும் செய்திகள்
குண்டாஸில் 6 பேர் கைது
02-Oct-2025
சில்மிஷ ஊழியர் போக்சோவில் கைது
29-Sep-2025
அருணாசலேஸ்வரர் கோவில் ஊழியரை கொல்ல முயற்சி
29-Sep-2025
போலீசாரை கொல்ல முயன்ற கஞ்சா கடத்தல் காரால் பகீர்
28-Sep-2025
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கும் இடையே நேற்று நடந்த, மறு ஊடல் வைபவத்தை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். சிவனடியாரான பிருங்கி மகரிஷி அருணாசலேஸ்வரரை காண தவமிருக்க, அவருக்கு காட்சி அளிக்க அருணாசலேஸ்வரர் சென்றார். அப்போது, தன்னை மதித்து வணங்காத பிருங்கி மகரிஷிக்கு, காட்சியளிக்க செல்லக்கூடாதென உண்ணாமுலையம்மன் தடை விதித்தார். அதை மீறி, அருணாசலேஸ்வரர் சென்றதால், இருவருக்கும் ஏற்பட்ட, 'திருஊடல் நிகழ்வு' நேற்று முன்தினம் நடந்தது.அதை தொடர்ந்து நேற்று, அருணாலேஸ்வரர் கிரிவலம் சென்று, பிருங்கி மகரிஷிக்கு காட்சி அளித்து, பின் செல்லும் வழியில் திருடர்களிடம் நகையை பறி கொடுத்து, ஆபரணங்கள் இல்லாமல் கோவிலிற்கு அருணாசலேஸ்வரர் திரும்பி செல்லும் நிகழ்வு நடந்தது. பின்னர், கோவிலில், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டு, 'மறுஊடல்' நடக்கும் வைபவம் நடந்தது. இதை, ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். இதை காணும் தம்பதிக்குள் ஒற்றுமை பலப்படும் என்பது, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
02-Oct-2025
29-Sep-2025
29-Sep-2025
28-Sep-2025