மேலும் செய்திகள்
சில்மிஷ ஊழியர் போக்சோவில் கைது
29-Sep-2025
அருணாசலேஸ்வரர் கோவில் ஊழியரை கொல்ல முயற்சி
29-Sep-2025
போலீசாரை கொல்ல முயன்ற கஞ்சா கடத்தல் காரால் பகீர்
28-Sep-2025
தி.மலையில் கூட்ட நெரிசல் பக்தர் பலி
25-Sep-2025 | 1
செய்யாறு : செய்யாறில், தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்த, சிட்பண்ட் நிறுவனத்திற்கு சொந்தமான மளிகைக்கடைக்கு, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், 'சீல்' வைத்தனர்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில், இயங்கி வந்த, 'ஏ.பி.ஆர்., சிட்பண்ட்' என்ற நிறுவனம், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தீபாவளி சீட்டு நடத்தி வந்தது. மேலும், திருவண்ணாமலை, வேலுார், விழுப்புரம், காஞ்சிபுரம், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஏஜென்டுகளை நியமித்து, பொதுமக்களிடம் தீபாவளி சீட் பணம் வசூலித்து, பொருட்களை வழங்கி வந்தது. ஏஜென்டுகளுக்கு கார், பைக், வீட்டுமனை வழங்கியதால், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தில் சேர்ந்ததால், பல கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டது. கடந்தாண்டு தீபாவளிக்கு, சீட்டு கட்டியவர்களுக்கு பொருட்கள் கொடுக்காமல் நிறுவன உரிமையாளர் தலைமறைவானார். இதனால், பணம் கட்டியவர்கள் செய்யாறிலுள்ள, அந்நிறுவனத்தின் மளிகைக்கடை, நகைக்கடை உள்ளிட்டவற்றை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், அதன் நிறுவனர் அல்தாஷிப்பை, கடந்த சில மாதங்களுக்கு முன் கைது செய்தனர். கடந்த மாதம், அந்நிறுவனத்திற்கு சொந்தமான பூட்டப்பட்ட மளிகைக்கடையை உடைத்து, பணம் கட்டிய பொதுமக்கள் சூறையாடினர்.நேற்று அந்நிறுவனத்திற்கு சொந்தமான நகைக்கடை, மளிகைக்கடைக்கு போலீசார், 'சீல்' வைத்து, அந்நிறுவனத்தில் பணம் கட்டி பாதித்தோர் புகார் தெரிவிக்கலாம் என, துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
29-Sep-2025
29-Sep-2025
28-Sep-2025
25-Sep-2025 | 1