உள்ளூர் செய்திகள்

போலி டாக்டர் கைது

போளூர்:போளூர் அருகே பி.எஸ்சி. நர்சிங் படித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த மண்டகொளத்துார் கிராமத்தை சேர்ந்தவர்முகமது கலாம் 33; இவர் பி.எஸ்சி. நர்சிங் படித்துவிட்டு வேறு ஒருவரின் டிப்ளமோ சான்றிதழை வைத்து மண்டகொளத்துார் கிராமத்தில் மருந்து கடை நடத்தி வருகிறார். அங்கு கிளினிக் அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். இவரிடம் சிகிச்சை பெற்ற பலர் பாதிப்புக்குள்ளாகி போளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்வது அதிகரித்தது.இது குறித்து புகார் எழுந்ததால் போளூர் அரசு மருத்துவமனை உதவி மருத்துவர் நாராயணன் முகமது கலாம் நடத்தி வந்த மருந்து கடை மற்றும் கிளினிக்கிற்கு சென்று சோதனை செய்தார். அப்போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்திய மருந்து மாத்திரைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து மருந்து கடைக்கு 'சீல்' வைத்தார். அவர் புகார் படி போளூர் போலீசார் முகமது கலாமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்