தி.மலையில் 2வது நாளாக கிரிவலம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். அதன்படி, நேற்று முன்தினம் மாலை, 6:10 மணி முதல், நேற்று மாலை, 4:51 மணி வரை பவுர்ணமி திதி இருந்தது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்தது. அதன்படி இரண்டாவது நாளாக நேற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலப்பாதையில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்து, பக்தர்களுக்கு இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினார். கோவிலில், ௫ மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.