உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / டிராக்டரை கிணற்றுக்குள் இழுத்த மோட்டார்: டிரைவர் பலி

டிராக்டரை கிணற்றுக்குள் இழுத்த மோட்டார்: டிரைவர் பலி

வந்தவாசி:திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மழையூரைச் சேர்ந்தவர் விஜயபாரத், 45. இவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் உள்ள மின் மோட்டார் பழுதானது. அதை சரிசெய்ய மின் மோட்டாரை, கிணற்றிலிருந்து வெளியே எடுக்கும் பணி நேற்று நடந்தது.இதற்காக, கோதண்டபுரத்தைச் சேர்ந்த பத்மநாபன், 42, என்பவர் டிராக்டர் மூலம் மோட்டாரை இழுத்து, மேலே கொண்டு வரும் பணியில் ஈடுபட்டார். அப்போது, திடீரென டிராக்டருடன் பத்மநாபன், கிணற்றில் விழுந்து படுகாயமடைந்தார்.அலறிய அவரை மிகுந்த சிரமத்திற்கு பின் மீட்டு, செய்யாறு அரசு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாகக் கூறினர். இந்த வினோத வழக்கை, வடவணக்கம்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ