உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / கணவர் இறந்த அதிர்ச்சி : மனைவியும் உயிரிழப்பு

கணவர் இறந்த அதிர்ச்சி : மனைவியும் உயிரிழப்பு

பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு அருகே, கணவர் இறந்த அதிர்ச்சியில், மனைவி கதறி அழுதபோது அவரும் உயிரிழந்தார். இருவரது உடலும், ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்டது. வேலுார் மாவட்டம், பேரணாம்பட்டை சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி முத்து, 91; இவரது மனைவி ராஜம்மா, 85; முத்து உடல்நிலை பாதித்து கடந்த சில நாட்களாக வீட்டிலேயே இருந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் காலையில் உயிரிழந்தார். கணவர் இறந்த அதிர்ச்சியில் அழுது கொண்டிருந்த மனைவி ராஜம்மாவும் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இருவரது உடலுக்கும் உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின், அன்று மாலையில் அருகேயுள்ள இடுகாட்டில், இருவரது சடலமும் ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை