/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / தீபத்தன்று மலை ஏற அனுமதி கிடைக்குமா? திருவண்ணாமலையில் வல்லுனர் குழு ஆய்வு
தீபத்தன்று மலை ஏற அனுமதி கிடைக்குமா? திருவண்ணாமலையில் வல்லுனர் குழு ஆய்வு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலை, 2,668 அடி உயரம், 14 கி.மீ., சுற்றளவு கொண்டது. இதை சுற்றி, 20,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. கடந்த, டிச., 1ல், பெஞ்சல் புயலால், மலை மீது ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதில், அடிவாரத்தில் ஒரு வீட்டில், 7 பேர் சிக்கி பலியாகினர். வரும், 13ல் தீப திருவிழா என்பதால், மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. மலையில் ஏறிச்சென்று தீபத்தை காண, சில ஆண்டுகளாக, 2,500 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். தற்போது மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், பக்தர்களை அனுமதிக்க சாத்தியக்கூறு உள்ளதா என, புவியியல் மற்றும் சுரங்கத்துறை வல்லுனர் உள்ளிட்ட எட்டு பேர் குழுவினர், மலை மீது ஏறிச் சென்று நேற்று காலை ஆய்வு செய்தனர்.