உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / தி.மலையில் 15 டன் பாறையை உடைத்து அகற்றும் பணி தீவிரம்

தி.மலையில் 15 டன் பாறையை உடைத்து அகற்றும் பணி தீவிரம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில், 15 டன் பாறையை உடைத்து அகற்றும் பணி நடந்து வருகிறது. திருவண்ணாமலை, அண்ணாமலையார் மலையில், 2024 டிச., 1ல் பெஞ்சால் புயலால் பெய்த கனமழையால், மலை அடிவார பகுதிகளான வ.உ.சி., நகர், 10 மற்றும் 11வது தெருவில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும், மலை மீதிருந்து, 40 டன் பாறை சரிந்து வீட்டின் மீது விழுந்ததில், ஏழு பே ர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். தற்போ து, வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மண் சரிவு ஏற்பட்ட இடத்தை கலெக்டர் தர்ப்பகராஜ், இரு நாட்களு க்கு முன் ஆய்வு செய்தார். அப்போது வ.உ.சி., நகர் ஐந்தாவது தெரு, மலை அடி வாரத்தின் மேல் பகுதியில், 15 டன் பாறை ஆபத்தான நிலையில் இருந்ததை அறிந்த கலெக்டர், அவற்றை உடைத்து அப்புறப்படுத்த நெடுஞ்சாலை துறை, பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, திருச்சியை சேர்ந்த பாறை உடைக்கும் குழுவினர், பாறையை உடைத்து அகற்றும் பணியை நேற்று துவக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி