உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / நகராட்சி அலுவலகம் முன் படுத்து தெருநாய் கடி வாங்கியவர் தர்ணா

நகராட்சி அலுவலகம் முன் படுத்து தெருநாய் கடி வாங்கியவர் தர்ணா

திருச்சி:திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சியில், நேற்று முன்தினம் ஒரே நாளில், பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள், 15 பேரை கடித்தன.நேற்று, நாகராஜ் என்பவரை தெரு நாய் கடித்ததால், மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற அவர், நகராட்சி அலுவலகத்துக்கு சென்று, நுழைவாயில் முன் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.நாய்களை கட்டுப்படுத்த பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், தான் நாய் கடிக்கு ஆளாகி உள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சு நடத்தியதை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு எழுந்து சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை