உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / கோவில் நிகழ்ச்சிக்கு செல்லாத அமைச்சர் மகேஷ்; நன்கொடையை திருப்பிக் கொடுத்த கிராம மக்கள்

கோவில் நிகழ்ச்சிக்கு செல்லாத அமைச்சர் மகேஷ்; நன்கொடையை திருப்பிக் கொடுத்த கிராம மக்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி:திருச்சி மாவட்டம், மருங்காபுரி அருகே உள்ள டி.இடையப்பட்டியில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம், கடந்த ஜூன் 12ல் நடந்தது. முன்னதாக, கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளுமாறு கிராம மக்களும், தி.மு.க.,வினரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷுக்கு அழைப்பு விடுத்தனர். திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., செயலராக மகேஷ் உள்ளார். இந்தப் பகுதியில் தான் சம்பந்தப்பட்ட முருகன் கோவில் அமைந்துள்ளது. அதனால், முருகன் கோவில் கும்பாபிஷேகத்துக்கு அழைப்பு விடுத்ததும், கண்டிப்பாக வருவதாக ஒப்புக் கொண்டார் அமைச்சர். ஆனால், ஒப்புக் கொண்டபடி கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு செல்லவில்லை. ஆனாலும், 10,000 ரூபாயை கோவிலுக்கு நன்கொடையாக அளித்தார். டி.இடையப்பட்டி பகுதியில் இருக்கும் தி.மு.க.,வினர் சிலர், 'என்னண்ணே கோவில் நிகழ்ச்சிக்கு வராமல் தவிர்த்துட்டீங்களே...' என கேட்க, 'இன்னொரு நாளில் கட்டாயம் வருவேன்' என்று சொல்லி அனுப்பியுள்ளார் மகேஷ். இந்நிலையில், 'ஜூலை 28ல், மருங்காபுரி பகுதிக்கு அமைச்சர் மகேஷ் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது, டி.இடையப்பட்டியில் இருக்கும் முருகன் கோவிலுக்கு அமைச்சர் மகேஷ் வருவார்' என்று, அந்தப் பகுதி தி.மு.க., ஒன்றிய செயலரும், மருங்காபுரி யூனியன் சேர்மனுமான பழனியாண்டியிடம் அமைச்சர் தரப்பில் கூறியுள்ளனர். இதையடுத்து, கடந்த ஜூலை 28ல், பூரண கும்பம், ஆளுயர மாலை, பூஜை செய்த பிரசாதம், சால்வைகள் உள்ளிட்டவைகளோடு, அமைச்சர் வருகைக்காக லோக்கல் தி.மு.க.,வினரும், கிராமத்தினரும், முருக பக்தர்களும் திரளாக கோவில் முன் கூடியிருந்தனர். மருங்காபுரி பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அமைச்சர் மகேஷ், இரவு 9:00 மணி வரை கோவிலுக்கு வரவில்லை. இதனால், கோபம் அடைந்த கிராமத்தினர், மக்களையும் கோவிலையும் அவமதித்து விட்டதாக கொந்தளித்து இருந்துள்ளனர். கூடவே, அமைச்சருக்காக வாங்கி வைத்திருந்த மாலை, பிரசாதம், சால்வைகள் உள்ளிட்டவைகளோடு, அமைச்சர் கோவிலுக்குக் கொடுத்த நன்கொடை, 10,000 ரூபாயுடன் கூடுதலாக 100 ரூபாய் சேர்த்து, 'அமைச்சரிடமே கொடுத்து விடுங்கள்' எனச் சொல்லி யூனியன் சேர்மன் பழனியாண்டியிடம் அனைத்தையும் கொடுத்து விட்டனர். இதனால், பதற்றம் அடைந்திருக்கும் அமைச்சர் ஆதரவாளர்கள், டி.இடையப்பட்டி கிராம மக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருப்பதாக கிராமத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Nithish Enterrprises
ஆக 02, 2024 19:19

நாங்கள் முக்குலத்தோர் சமூகத்தை சார்ந்த குலதெய்வ கோயில் கும்பாபிஷேகத்துக்கு அழைக்க 10பேர் கொண்ட குழு சென்றிருந்தோம், அவர் யாரையும் மதிக்கவே இல்லை, அவருக்கு நம்மளுடைய ஓட்டுக்கள் மட்டுமே வேண்டும்.


Nandha
ஆக 02, 2024 11:44

உங்களையெல்லாம் அடிச்சாலும் புத்தி வராது...இந்தமாதிரியான முட்டால்கள் ஒழிந்ததான் தமிழகத்துக்கும் கோவில்களுக்கும் வளர்ச்சியே...


P M Sampathkumar
ஆக 02, 2024 07:44

அமைச்சருக்கு மக்கள் பணி நிறைய இருக்கிறது, அவரை இது போன்ற சிறு சிறு விழாக்களுக்கு அழைக்காமல் அவரது பணியை சிறப்பாக செய்ய அனுமதிக்க வேண்டும்.


Saran Scr
ஆக 03, 2024 07:41

திருவெம்பூர் பகுதில ஒரு கல்யாணம் விடாம அட்டென்ட் பன்றான். கோவில் நிகழ்ச்சிக்கு போக முடியாதா ?


PARTHASARATHI J S
ஆக 01, 2024 06:15

முருகனுக்கு மகேஷை பார்க்க பிடிக்கலயோ என்னவோ ?


Sathyanarayanan Sathyasekaren
ஆக 01, 2024 06:01

திருட்டு திமுக அரசியல் வியாதிகளை கோவில் விழாக்களுக்கு அழைப்பதே தவறு


Kalyanaraman Andhukuru.R.
ஆக 02, 2024 21:10

உண்மையான கருத்து


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை