உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / திருச்சி எஸ்.ஆர்.எம்.,ஓட்டல் விவகாரம்: தனி நீதிபதி உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு

திருச்சி எஸ்.ஆர்.எம்.,ஓட்டல் விவகாரம்: தனி நீதிபதி உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு

மதுரை : திருச்சியில் குத்தகை நிலத்திலிருந்து வெளியேற்ற எஸ்.ஆர்.எம்., ஓட்டல் வளாகத்தை தமிழக அரசு கையகப்படுத்தியது சட்டவிரோதம் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இரு நீதிபதிகள் அமர்வு ஒத்தி வைத்தது. திருச்சி கொட்டப்பட்டுவில் தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு (டி.டி.டி.சி.,) சொந்தமான இடத்தில் எஸ்.ஆர்.எம்., குழும ஓட்டல் உள்ளது.குத்தகைக் காலம் முடிந்துவிட்டதால் இடத்தை காலி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.இதற்கு எதிராக எஸ்.ஆர்.எம்., ஓட்டல் நிர்வாகம்,' நிலத்திலிருந்து எங்களை வெளியேற்றக்கூடாது என உத்தரவிட வேண்டும்,' என்று உயர்நீதிமன்றத்தில் மனு செய்தது.ஜூன் 20ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்: குத்தகை ஒப்பந்தம் 1996ல் போடப்பட்டது. அங்கு மனுதாரர் தரப்பு நட்சத்திர ஓட்டல் கட்டியது. குத்தகைக் காலம் 30 ஆண்டுகள். அது 2024 ஜூன் 13ல் முடிவடைந்தது.அரசு தரப்பு, 'மனுதாரர் தரப்பு குத்தகை தொகையை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளது. சொத்தில் தொடர்வதற்கு மனுதாரருக்கு உரிமை இல்லை.குத்தகைக் காலம் முடிந்த பின்னரே அவ்வளாகத்தை அதிகாரிகள் கையகப்படுத்தினர். ஒப்பந்தத்திற்கு எதிராக மனுதாரர் வாதிட முடியாது,' என தெரிவித்தது.அந்த நட்சத்திர ஓட்டலில் பலர் தங்கியுள்ளனர். மனுதாரர் 30 ஆண்டுகளாக அங்கு உள்ளார். குத்தகைக் காலம் முடிந்துவிட்டது என்பதில் சந்தேகமில்லை.அதை புதுப்பிப்பதற்கான மனுதாரரின் கோரிக்கையை அரசு நிராகரித்துவிட்டது. ஜூன் 14ல் அவ்வளாகத்திற்குள் நுழைந்து கையகப்படுத்திய மாவட்ட நிர்வாக அதிகாரிகள், போலீசாரின் நடவடிக்கை சட்டவிரோதமானது.இவ்வாறு உத்தரவிட்டார். இதை எதிர்த்து டி.டி.டி.சி.,மேலாண்மை இயக்குனர் மேல்முறையீடு செய்தார்.நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார், ஜி.அருள்முருகன் அமர்வு நாளை (ஜூலை 25) ஒத்திவைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

N Sasikumar Yadhav
ஜூலை 24, 2024 15:51

குத்தகைதாரருக்கே நிலம் சொந்தம் என கருணாநிதி சட்டம் போட்டு சிங்கார சென்னை மவுண்ட் ரோட்டில் ஒரு சினிமா தியேட்டரை குத்தகைதாரர்கள் மீட்டு கொடுத்தாரே . அதை படித்து பார்த்து தீர்ப்பு வழங்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை