மேலும் செய்திகள்
வனத்தில் மூன்று மான்களை வேட்டையாடிய கும்பல்
29-Dec-2025
கனிம வள ஆய்வு விமானம் தாழ்வாக பறந்ததால் பீதி
26-Dec-2025
ஆசிரியையிடம் ரூ.1,500 லஞ்சம் வட்டார கல்வி அலுவலர் கைது
16-Dec-2025 | 1
திருச்சி,:திருச்சி, மலைக்கோட்டை பகுதி சஞ்சீவி நகரை சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் சசிக்குமார். இவர், கடந்த சனிக்கிழமை தன் குடும்பத்தினருடன், டிராவல் பேக்கில், 23 சவரன் நகையை எடுத்துக் கொண்டு, வெளியூர் செல்ல சத்திரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து, மத்திய பஸ்ஸ்டாண்ட்டுக்கு டவுன் பஸ்சில் சென்றுள்ளார். அவர்கள் பாலக்கரை பகுதியில் சென்றபோது, அவர்கள் டிராவல் பேக்கை, மர்ம நபர் திருடிச் சென்றது தெரிய வந்தது. சசிக்குமார், பாலக்கரை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, பாலக்கரை மற்றும் அருகே உள்ள பஸ் ஸ்டாப் பகுதி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது, ஐந்து பேர் கையில் பையுடன் செல்வது தெரிந்தது. அவர்களை போலீசார் தேடினர். அந்த ஐந்து பேரும், ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ராஜா, 42, தென்னுாரை சேர்ந்த சூசைராஜ், 34, யாசர் அராபத், 29, அரியமங்கலத்தை சேர்ந்த சேக் தாவூத், 38, பீமநகரை சேர்ந்த அன்வர் சதக், 38, என தெரிய வந்து, அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகைகளும் மீட்கப்பட்டன.
29-Dec-2025
26-Dec-2025
16-Dec-2025 | 1