மேலும் செய்திகள்
பெண்ணை கர்ப்பமாக்கி மாயமான வாலிபர் கைது
14-Dec-2025
சிமென்ட் ஆலையில் ரெய்டு நிறைவு
12-Dec-2025
திருச்சி, : திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள முத்தபுடையான்பட்டியில் நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டு நடந்தது. இதில், பல மாவட்டங்களைச் சேர்ந்த, 700க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 100க்கும் மேற்பட்ட காளைகளை, டோக்கன் இருந்தும், நேரமில்லாமல் வாடிவாசலில் அவிழ்க்கவில்லை.இதனால் அதிருப்தி அடைந்த அந்த காளைகளின் உரிமையாளர்கள், காளைகளுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின், போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினர். இந்நிலையில், நேற்று காலை, முத்தபுடையான்பட்டி ஊருக்கு பின்புறம் உள்ள ரயில் தண்டவாளத்தில், ஜல்லிக்கட்டு காளை ஒன்று இறந்து கிடந்தது.இதுகுறித்து தகவலறிந்த திருச்சி ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து, காளையின் உரிமையாளர் குறித்து விசாரிக்கின்றனர். ஜல்லிக்கட்டு நடந்த இடத்தின் அருகே உள்ள ரயில்வே தண்ட வாளத்தை கடக்க முயன்ற போது, காளை மீது ரயில் மோதி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
14-Dec-2025
12-Dec-2025