மேலும் செய்திகள்
பெண்ணை கர்ப்பமாக்கி மாயமான வாலிபர் கைது
14-Dec-2025
சிமென்ட் ஆலையில் ரெய்டு நிறைவு
12-Dec-2025
முசிறி:திருச்சி மாவட்டம், முசிறி கீழத்தெருவைச் சேர்ந்தவர் சுரேந்திரன், 35. இவர் நேற்று முன்தினம் மதியம், முசிறி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள பாரில் மது குடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு, முசிறியில் பணியாற்றும் முருகானந்தம், அண்ணாமலை, கார்த்திக் ஆகிய மூன்று போலீசாரும் மது குடிக்க வந்தனர். முருகானந்தத்துக்கும், சுரேந்திரனுக்கும் ஏற்கனவே முன்விரோதம் உள்ளது. இதனால், மூன்று போலீசாரும் மது குடிப்பதை சுரேந்திரன் வீடியோ எடுத்தார்.இதை பார்த்த போலீஸ்காரர் முருகானந்தம், அவரை தாக்கி, மொபைல் போனை பிடுங்கிச் சென்று விட்டார். காயமடைந்த சுரேந்திரன், முசிறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தகவலறிந்த திருச்சி எஸ்.பி., வருண்குமார், மதுபான பாரில் தரக்குறைவாக நடந்து கொண்ட முருகானந்தம், கார்த்திக், அண்ணாமலை ஆகிய மூன்று போலீசாரையும் ஆயுதப்படைக்கு மாற்றி நேற்று உத்தரவிட்டார்.
14-Dec-2025
12-Dec-2025