உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / கோர்ட்டில் சாட்சி சொன்ன தம்பதி மீது தாக்குதல்

கோர்ட்டில் சாட்சி சொன்ன தம்பதி மீது தாக்குதல்

திருச்சி:திருச்சி மாவட்டம், உளுந்தங்குடிகிராமத்தைச் சேர்ந்தவர் தனபால். இவரது குடுபத்தினருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் ரமேஷ் குடும்பத்தினருக்கும், 2019ம் ஆண்டு, வீட்டு வாசலில் கோலம் போடுவதில் பிரச்னை ஏற்பட்டது.ரமேஷ், அவரது மகன் பிரேம்குமார் ஆகியோர் தனபாலை அடித்து கொலை செய்தனர். இது தொடர்பாக, திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடக்கிறது. ரமேஷ், பிரேம்குமார் இருவரும் ஜாமினில் வந்தனர். கடந்த மாதம் விசாரணையின் போது, தனபால் சகோதரர் புருஷோத்தமன் குடும்பத்தினர், ரமேஷ் தரப்புக்கு எதிராக சாட்சியம் அளித்தனர். ஆத்திரமடைந்த ரமேஷ், பிரேம்குமார் ஆகியோர், நேற்று புருஷோத்தமன் வீட்டுக்கு சென்று, அவரையும், மனைவி சத்யாவையும் அரிவாளால் வெட்டி தப்பினர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை