உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / நீலகிரி எம்.பி., ராஜாவின் உருவப்படம் எரிப்பு

நீலகிரி எம்.பி., ராஜாவின் உருவப்படம் எரிப்பு

திருச்சி:திருச்சியில், நேற்று, வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில், தலைவர் ஹரிஹாரூன் தலைமையில், திருச்சி நீதிமன்றம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அதில், சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி., மற்றும் எம்.ஜி.ஆர்., போன்ற தலைவர்களை, முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி எம்.பி.,யுமான ராஜா தொடர்ந்து தரக்குறைவாக விமர்சித்து வருவதை கண்டித்து, கோஷங்களை எழுப்பினர்.தொடர்ந்து, அவரது உருவப் படத்தை செருப்பால் அடித்தும், எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை